மீண்டும் நகுல், சுனைனா நடிப்பில் வெளியாகும் “எரியும் கண்ணாடி” திரைப்பட டீஸர்!! வைரலாகும் வீடியோ.

0

“Eriyum kannadi” movie teaser with Nakhul and Sunaina starring again !! The video is viral:நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்தத் திரைப்படத்தில் இவர் நகுலுக்கு ஜோடியாக இணைந்து நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் வரும் “நாக்க முக்கா” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஓடி பிரபலமானது. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், நீர்ப்பறவை, சமர், நம்பியார், வன்மம், காளி, சில்லுக் கருபட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து இவர் வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் படத்தின் ஹீரோவான நகுலுடன் இணைந்து எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி திரைப்படத்தை சச்சின் தேவ் அவர்கள் இயற்றியுள்ளார். மேலும் இந்த திரைபடத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் சேமிப்பு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இந்த திரைப்படத்தின் மற்ற பணிகள் தொடங்கும் என நடிகை சுனைனா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது எரியும் கண்ணாடி என்கின்ற திரைப்படத்தின் டீசரை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் திரைப்படமும் முழுக்க முழுக்க காதல் கதையைக் கொண்டது போல உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளபக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.