மூன்று மணி நேரமும் வேற உலகில் இருந்த அனுபவம்..! அவதார் 2 முழு விமர்சனம் இதோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான பாவனையில் இருப்பதன் காரணமாக குழந்தைகள் இளசுகள் பெருசுகள் என அனைவரும் ரசித்தார்கள்.

இந்நிலையில் பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து வெளியானாலும் அதே பிரமிப்பு, அதே பூரிப்பு, இருப்பது மட்டுமில்லாமல் சாதாரண கதையை எடுத்துக்கொண்டு ஜேம்ஸ் கேமரூன் வித்தியாசமாக இந்த திரைப்படத்தை  காட்டி கைதட்டளை பெற்றுவிட்டார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இனம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, முக்கியத்துவம், போன்றவற்றை இந்த திரைப்படத்தில் காட்டியது மட்டும் இல்லாமல் குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து கிளைமாக்ஸில் மிக அருமையாக காட்டியிருப்பார் மேலும் காடுகள் கடல் என இரண்டிலுமே ரசிகர்களை கொண்டு செல்வது வித்தியாசமாக அமைந்துள்ளது.

மேலும் தியேட்டர்களுக்குள் சென்ற மூன்று மணி நேரம் ஏதோ வேறொரு உலககிற்க்கு சென்று வந்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆக்‌ஷனுக்கும் எமோஷன் நல்ல இருக்கும் குறைவே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும் 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும் காரணமாக படம் எப்படி இருக்கிறது என்று கவலைப்பட தேவையில்லை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும் வேற லெவலில் இருக்கிறது என பலரும் கூறியுள்ளார்கள்.

Leave a Comment