சினிமாவில் என்னப்பா சண்டை காட்சி எடுக்குறாங்க.! உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரஜன் வைரலாகும் வீடியோ

0

சின்னத்திரையில் சமீபகாலமாக வெள்ளித்திரையில் எடுக்கப்படும் காதல், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகளைப் போன்றே சின்னத்திரையிலும் எடுத்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் படத்தின் தலைப்பையே சமீபகாலமாக வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஈரமான ரோஜாவே, ரோஜா, பூவே பூச்சூடவா, செம்பருத்தி என பல சீரியல்களை உதாரணத்திற்கு கூறலாம். அந்த நிலையில் ஈரமான ரோஜாவே அன்புடன் குஷி ஆகிய  இரண்டு சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

தற்பொழுது இந்த சீரியல்களின் குழுவினர் இணைந்தது போல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரஜன் ஓடும் வேனில் பிரேக் பிடிக்காததால் அதனை சரிசெய்வது போல் மிகவும் கஷ்டமான காட்சிகளில் நடித்துள்ளார்.

இதன் ப்ரொமோ  வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ