திருமணத்தில் குழந்தையாக கலந்துக் கொண்டு அவருக்கே மனைவியாக நடித்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை.! வைரல் புகைப்படம்

Eramana rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் நல்ல வரவேற்பினை பெற்றதால் இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தி வித்தியாசமான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. அப்படி முதல் சீசனில் திரவியம் மற்றும் பவித்ரா இணைந்து நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் திரவியத்தைத் தவிர மற்ற அனைத்து பிரபலங்களும் மாற்றப்பட்டு வித்தியாசமான கதை கலத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

சமீப காலங்களாக தொடர்ந்து பிரச்சனைகளுடன் மோசமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் பெரிதும் அடிவாங்கி வருகிறது. அந்த வகையில் கர்ப்பமாக இருந்த காவியாவின் கரு கலைந்து இருக்கிறது மேலும் பிரியா ஜீவாவை பிரிந்து வாழ வேண்டும் என நினைத்து வருகிறார்.

எனவே இந்த சீரியல் சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கவராத காரணத்தினால் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் பார்த்திபன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் சித்தார்த். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Siddharth
Siddharth

அந்த வகையில் சித்தார் தனது திருமண வரவேற்ப்பின் பொழுது நடன இயக்குனர் சாண்டி மற்றும் இப்பொழுது காவியாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வரும் கேப்ரியல்லா கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சித்தார்த்தின் திருமணத்தில் குழந்தையாக கலந்துக் கொண்ட கேப்ரியல் தற்பொழுது வளர்ந்து அவருக்கே ஜோடியாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருவது. ஆச்சரியமாக இருக்கிறது இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment