திரையரங்கில் “அண்ணாத்த” வந்தது போதும்.? OTT தளத்திற்கு மாற்றம் – அதுவும் இத்தனை OTT தளத்தில் வெளியாகிறதா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து இருப்பதால் இவரது மார்க்கெட் அதிகமாக இருக்கிறது.

அந்த காரணத்தினால் தான் ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பு இவரது திரைப்படங்கள் அங்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகின்றனர் அதன் காரணமாக அசால்டாக 200 கோடிக்கு மேல் அள்ளுகிறது. அண்ணாத்த படம் எப்படி மக்களுக்கு எப்படித் படமாக அமைந்துள்ளது.

அதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது. அண்ணாத்த படத்தை தனுஷ் மற்றும் அவரது குடும்பம் ரஜினி குடும்பமும் திரையரங்கில் பார்த்து கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி அண்ணாத்த திரைப்படத்தை அவர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

காரணம் அண்ணன் – தங்கை பாசத்தை அப்படியே உரித்து வைத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருந்தனர் ரஜினி – கீர்த்தி சுரேஷ் இவர்களுடன் கைகோர்த்து நயன்தாரா, மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு மற்றும் பலர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தனர் இந்த திரைப்படமும் இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் OTT தளத்தில் வெளியிட இருக்கிறது அதுவும் ஒன்று தளம் அல்ல இரண்டு OTT தளங்களில் வெளியாகி இருக்கிறது சன் பிக்சர்ஸ் வைத்திருக்கும் சன் நெக்ஸ்ட் OTT தளத்திலும் மற்றும் நெட்பிளிக்ஸ் OTT தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகின்றன.

Leave a Comment