enjoy Enjamin குக்கூ பாடலுக்கு ரோஜா சீரியல் நடிகைகள் ஆட்டம்.! பட்டையை கிளப்பும் வீடியோ

சன் டிவி என்றாலே சீரியலுக்கு பெயர்போன ஒரு தொலைக்காட்சி ஆகும். இவ்வாறு பல சீரியல்களை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் ஒளிபரப்பி வந்தார்கள்.  இதனை அறிந்த விஜய் டிவி, ஜீ தமிழ் உட்பட இன்னும் பல தொலைக்காட்சிகள் சன் டிவிக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியில் ஆர்வம் உள்ள நடிகைகளை தங்களது சீரியல்களில் இறக்கி சன் டிவியை ஓரம் கட்டி விட்டார்கள்.

சன்டிவி பொதுவாக இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்ததால் சன் டிவியில் சீரியல் பார்ப்பதை ரசிகர்கள் நிறுத்திவிட்டார்கள்.

பிறகு சன் டிவியும் தற்பொழுது  கவர்ச்சியில் ஆர்வம் உள்ள புதிய முக நடிகைகளை வைத்து பல புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் ரோஜா, பூவே உனக்காக உட்பட இன்னும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில் ரோஜா சீரியல் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகிவுள்ளவர் பிரியங்கா நெல்காரி. இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு எந்த படமும் வெற்றியை தராத காரணத்தினால் சின்னத்திரையில் நடிப்பதை தொடர்ந்தார்.  அந்த வகையில் ரோஜா சீரியலின் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பிரியங்கா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு தற்பொழுது உள்ள சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ட்ரெண்டிங்காக இருக்கும் பாடல் என்ஜாய் என்ஜாமி இந்த பட்டாலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா உட்பட அந்த செட்டில் உள்ள அனைவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/G5WKU5ja5Fs

Leave a Comment