தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் “என்ஜாய்  எஞ்சாமி”.! youtube – ல் செய்த புதிய சாதனை.! கொண்டாத்தில் ரசிகர்கள்.

0

திரையுலகில் வலம் வரும் பாடல்களை விட ஆல்பம் சாங்க் என மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் என்ஜாய்  எஞ்சாமி என்ற ஆல்பம் சாங் வெளிவந்து குறைந்த நேரத்திலேயே உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியது.

இந்த பாடல் யூ டியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடலை தீ  என்பவரும் பாடியிருந்தார் இவர் இதற்கு முன்பு உசுரு நரம்புல இறுதிச்சுற்று, கண்ணம்மா காலா, ரவுடி பேபி மாரி 2  போன்ற பல்வேறு படங்களில் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அப்போது கிடைக்காத ரசிகர்கள் இந்த ஆல்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். அதேபோல காலா படத்தின் உரிமையை மீட்போம், வடசென்னை படத்தில் மத்திய சிறையிலேயே, மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு போன்ற பல்வேறு பாடல்களை பாடிய பாடகர் அறிவு.

enjoy ensamy
enjoy ensamy

இவர்கள் இருவரும் இணைந்து தான் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி உள்ளனர். நிலத்தை இழந்த பூர்வகுடிகளை மையப்படுத்தி இப்படிதான் என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் உருவானது. இந்தப் பாடல் தற்பொழுது ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் சந்தோஷப்படுத்தி வெற்றிநடை கண்டு வருகிறது.

இந்த பாடல் இதுவரை வெளியாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் youtube -ல் சுமார் 205 மில்லியன் பேர் இதை பார்த்து கண்டுகளித்துள்ளனர் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.