பவுலிங் என்ன கீழ் ஜாதியா..! நியூசிலாந்து அணிதான் வெற்றி.! ICC விதிகளை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்.!

0

England vs New Zealand : உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன, இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்து மேட்சை டிரா செய்தது.

அதனால் ஐசிசி விதிப்படி சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது, இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்தது, அதேபோல் அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதே ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்து சமன் செய்தது. அதனால் சூப்பர் ஓவர் முடிவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணியை வெற்றியாளராக அணிவித்தார்கள்.

இதுபற்றி இமைக்கா நொடிகள் புகழ் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது பவுண்டரியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகள் உள்ளது ஆனால் குறைந்த விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து தான் பவுலிங்கை ஏதோ கீழ்ஜாதி போல் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்கள், நியூசிலாந்து தான் வெற்றியாளராக அறிவித்திருக்க வேண்டும் என அவரது கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.