உலக கோப்பை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.! பெஸ்ட் பைனல், வித்தியாசமாக முடிந்த இறுதி போட்டி.!

0
England vs New Zealand
England vs New Zealand

உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதிக் கொண்டன, இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார், மேலும் இவர் 18 பந்துகளில் 19 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் இறங்கிய நிகோல்ஸுடன், கேப்டன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்த நிதானமாக ஆடினார் வில்லியம்ஸ் 9 ஓவர்கள் வரை நின்று 30 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார் பின்பு நிகோல்ஸுடன் 55 ரன்களில் ஆட்டமிழந்தார், இதனையடுத்து 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது அதன்பின்னர் ஸ்டோக்ஸும் பட்லரும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார்கள், அதுமட்டுமில்லாமல் இருவருமே அரைசதம் அடித்தார்கள், பட்லர் அவசரப்பட்டு 59 ரன்களில் ஆட்டமிழந்தார், கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் 2 பந்துகளை அபாரமாக வீசி ரன்னை கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் போல்ட் மூன்றாவது பந்தில் ஸ்டோக்ஸ் ஸ்டிக் சிக்சர் விளாசினார், கடைசி மூன்று பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது அப்பொழுது ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் அடித்தார் இரண்டாவது ரன் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கப்டில் விட்ட த்ரோவில் ஸ்டோர்க் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது அதனால் அந்த பாலில் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது அதனால் இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் அடித்து மேட்ச் டிரா ஆனது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது ஐசிசி விதிப்படி இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது அந்த சூப்பர் ஓவரில் 15 ரன்கள் இங்கிலாந்து அணி அடித்தது அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடித்தது அதனால் இதுவும் டிரா ஆனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே இது போல் மேட்ச் முடிந்தது இதுதான் முதல் முறை, அதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணிக்கே கோப்பை வழங்கப்பட்டது இங்கிலாந்து அணிக்கு. இதனையடுத்து உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது.