வாடகைக்கு பதிலாக உல்லாசம்.! இளம் பெண்களை குறிவைத்து சூறையாடும் ஹவுஸ் ஓனர்கள்.!

0
house-owner
house-owner

வாடகைக்கு வீடு கேட்டு வரும் இளம் பெண்களை குறிவைத்து ஹவுஸ் ஓனர்கள் வாடகை தர வேண்டாம் அதற்கு பதில் எங்களின் ஆசையை நிறைவேற்றுங்கள் என படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

பெரும்பாலும் வசதி இல்லாத இளம் பெண்கள், வேலைக்காக வரும் இளம் பெண்கள் வேலை காரணமாக வாடகைக்கு தங்கி இருக்கும் பழக்கம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது, ஆனால் பல நாடுகளில் வாடகையாக பணம்தான் வாங்குவார்கள் ஓனர்கள் ஆனால் இங்கிலாந்தில் வீட்டு வாடகைக்கு பதிலாக இளம் பெண்களின் கன்னித்தன்மையை கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல பத்திரிகை நிருபர் ஸ்டோன் தனது பிபிசி நிறுவனத்திற்கு அளித்த செய்தியில் வீட்டு உரிமையாளர்கள் வீடு வாடகைக்கு கேட்டு வரும் பெண்களிடம் முதலில் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு அதில் அழகான அவர்களை தேர்வு செய்து வாடகைக்கு விடுகிறார்கள், அதிலும் குறிப்பாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்களை தான் குறிவைத்து வாடகைக்கு விடுகிறார்கள், சில நேரங்களில் வாடகை கொடுக்க இயலாத இளம் பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டு வாடகையை கழித்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

சில ஹவுஸ் ஓனர்கள் வாடகைக்கு வரும் பெண்களிடம் இந்த உடலுறவு பற்றி செய்தியை வெளிப்படையாக கூறுவதும் உண்டு, இந்த கலாச்சாரம் மிக வேகமாக இங்கிலாந்தின் தென் பகுதிகளில் பரவி வருகிறது என அந்தக் குறிப்பேட்டில் கூறியுள்ளார்.