இணையதளத்தில் வைரலாகும் நடிகை வித்யூலேகாவின் நிச்சயதார்த்த புகைப்படம்!!. மாப்பிள்ளை இவர் தானா.

0

இந்த ஊரடங்கின் போது பல நடிகர், நடிகைகள் எளிமையான முறையில் தங்களது திருமண நிச்சயதார்த்தம் முற்றும் திருமணங்களை செய்து கொண்டனர்  என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் வாரிசு நடிகையான வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமனின் மகளாவார். தற்போது இவர் மிகவும் எளிமையாக தங்களது நெருங்கிய சொந்தங்களுடன் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர் 2012இல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்து பிரபலமானார்.

இப்படத்தினை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிசட்டை, மாஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவருக்கு கடைசியாக வெளிவந்த திரைப்படம் பஞ்சுமிட்டாய்.  மேலும் இவர் தற்போது தெலுங்கு திரை படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கறார்.

நடிகை வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்ததின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அதில் நாங்கள் மாஸ்க் அணிந்து இருந்தோம், புகைப்படம் எடுப்பதற்காக மாஸ்கை கழட்டி  விட்டோம் என பதிவிட்டிருந்தார்.

வித்யூலேகாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vidyuraman_1
vidyuraman_1
vidyuraman_118403547_796572211080500_5510187037537826813_n
vidyuraman_118403547_796572211080500_5510187037537826813_n