பாரதிகண்ணமாவிற்கு எண்ட் கார்டா.? இதோ வெண்பாவே வெளியிட்ட பதிவு புலம்பும் ரசிகர்கள்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை மக்கள் நன்கு ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள் ஆனால் பல வருடமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலை எப்பொழுதுதான் முடிப்பீங்க என ரசிகர்கள் வெறுத்து தள்ளும் அளவிற்கு ஓடும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலின் இயக்குனர் ஆரம்பத்தில் மக்களை மிகவும் கவர்ந்து விட்டார் அதிலும் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் தற்பொழுது சீரியலை இன்னும் வெகு நாட்கள் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சீரியலின் இயக்குனர் கதை புரியாமல் ஏதோ பண்ணி இந்த சீரியலை இன்னும் நிறைய நாட்கள் ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் மக்களோ இதை எத்தனை நாட்கள் தான் நாங்களும் பார்த்துக் கொண்டிருப்போம் அதிலும் விறுவிறுப்பாக ஓடினால் பரவாயில்லை நாங்களே வெறுக்கும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலுக்கு எண்டே கிடையாதா என சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் instagram பக்கத்தில் வந்தால் ரசிகர்கள் உடனே கேட்கும் கேள்வி எப்பொழுதுதான் இந்த சீரியலை முடிப்பீங்க என்பது மட்டும் தான் கேட்டு வருகிறார்கள்.

அதற்கு ஏற்றது போல் தற்போது இந்த சீரியலில் நடித்துள்ள பிரபலம் ஒருவர் ரசிகருக்கு பதில் கூறியுள்ளார் ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை இந்த சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிடம் உங்கள் கதாபாத்திரத்திற்கு எண்டே இல்லையா என்று கேட்டதற்கு அவர் வெண்பாவிற்கு என்டே கிடையாது என பதில் அளித்துள்ளார்.

venba
venba

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியல் இன்னும் ஒளிபரப்பாகிக் கொண்டே தான் இருக்குமா இதற்கு ஒரு முடிவே கிடையாதா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment