தன் குழந்தையுடன் டிக்டோக்கில் கலக்கும் ”எமி ஜாக்சன்” வைரல் வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை எமி ஜாக்சன். ஆர்யா நடிப்பில் 2010ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த படம் மதராசபட்டினம். இத்திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடதக்கது.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ், ரஜினி ஏன பலருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இவர் கடைசியாக நடித்த 2.0 பெரிய பிளாக் பஸ்ட்டர் படமாக உருப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

எமி ஜாக்சன் அவர்கள் சமீபத்தில் சார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். அவரோடு பல காலமாக லிவிங் டு கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் அவர்கள் அப்பொழுது கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் பெரும் சர்ச்சைக்கு தள்ளப்பட்டார். கடந்த மே மாதம் ஆன்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை அவருக்கு பிறந்தது.

குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் எமி ஜாக்சன் அவர்கள் அவ்வபொழுது சமூக வலைதளத்தில் தனது க்யூட்டான  சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தனது செல்ல மகனுடன் டிக் டாக் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுயுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Leave a Comment