உன்ன மாரி ஒருத்தன என் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது ஜீவாவை பார்த்து கண்ணீருடன் கூறும் ப்ரியா.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய ப்ரோமோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே 2 வில் இன்றைய எபிசோடில் ஜீவா ரிசப்ஷனில் நடந்த அனைத்தையும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பிரியா ஒரு கணவனிடம் பெண் எதிர்பார்ப்பது உண்மையை தான் ஆனால் அது கூட எனக்கு கிடைக்கவில்லை என அழுது கொண்டு இருக்கிறார். அதே போல் ப்ரியா நடந்துகிட்ட அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜீவா காரில் பிரியாவை தேடிக்கொண்டே இருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில் பிரியா ஹோமுக்கு வந்து சேர்கிறார் அங்கு ஒரு லேடி இடம் தனக்கு நடந்த அனைத்தையும் கூறுகிறார். பல பேருக்கு நல்லது செய்யும் உங்களுக்கா இதுபோல் நடந்தது நீங்கள் உடைந்து விடாதீர்கள் உங்களை நம்பி பல பேர் இருக்கிறார்கள் என அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார்.

ரம்யா நடந்து கொண்ட யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது லேப்டாப்பில் ஜீவா மற்றும் பிரியாவின் புகைப்படத்தை பார்த்து கற்றுகிறார் அப்பொழுது அவரின் அம்மா வருகிறார் அவரிடம் கல்யாணத்திற்கு முன்னாடி ஜீவா யாரை லவ் பண்ணி இருக்காருன்னு தெரியுமா.? காவியாவ தான் என கூறிவிடுகிறார் உடனே அவரின் அம்மா இது போதும் அவங்கள நிம்மதியா இல்லாம அடிச்சிடலாம் என கூறுகிறார்.

ரம்யா இந்நேரம் காவியா மற்றும் பார்த்தியின் வாழ்க்கையை அம்மா கெடுத்து இருப்பாங்க என நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் ரம்யாவின் அம்மா வருகிறார் அம்மாவிடம் ஏமா ஒரு மாதிரியா இருக்க என்னாச்சு என்ன கேட்கிறார். உடனே அவரின் அம்மா அழுகிறார். மண்டபத்துல என்ன நடந்ததுமா ஏன் அழுவுற எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நடந்த அனைத்தையும் ரம்யாவின் அம்மா அவரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே என்னமா சொல்ற பார்த்தி மாமா வா இப்படி சொன்னாரு  என ரம்யா கேட்கிறார் என்னால் நம்பவே முடியவில்லை எனக் கூறுகிறார் அதற்கு அவரின் அம்மாவும் என்னாலும் நம்ப முடியல என கூறுகிறார். ரம்யா உடனே இதற்கு பின்னாடி ஏதோ இருக்கிறது என கூற உடனே ரம்யாவின் அம்மா ஆமாம் ரம்யா பார்த்தி காவியாவை காதலிக்க ஆரம்பிச்சிட்டான் இனிமே அவன் மனசு மாறவே மாறாது உன்னை ஏத்துக்கவே மாட்டேன் என கூறிவிடுகிறார்.

ஆனா உன் கூட வாழாத பார்த்தி வேற யார் கூடயும் வாழ மாட்டான் நான் வாழ விட மாட்டேன் என சபதம் செய்கிறார் ரம்யாவின் அம்மா. எல்லாரும் முன்னாடி என்ன அவமானப்படுத்தினதுக்கு சரியான பதிலடி கொடுத்து ஆகணும் எனக் கூறுகிறார். நாம கிட்ட  எல்லாமே இருக்கு ஆனா நம்ம நிம்மதியை பறிச்சிட்டாங்க நம்ம நிம்மதியா பரீட்ச காவியாவையும் பார்த்தியையும் நான் சும்மா விடமாட்டேன் என ரம்யாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஹோம்க்கு போன் பண்ணி ப்ரீயா வந்தாளா என கேட்க பிரியா இங்க தான் இருக்கா என கூறி விடுகிறார்கள். உடனே ஜீவா ஹோமுக்கு செல்கிறார். அங்கு பிரியா சந்திக்க முடியாது எனக் கூறியும் அடம் பிடிக்கிறார் ஜீவா பின்பு அங்கு வேலை பார்ப்பவர் நீங்க ரெண்டு பேரும் பேசினால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என பேசுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார்.

ஜீவாவை பார்த்து பிரியா என்னன்னு சொல்லுங்க என கேட்க சாரி கேட்கிறார் ஜீவா நான் காவியாவை தான் காதலிச்சேன் என்ற விஷயத்தை உன்கிட்ட மறைச்சதுக்கு சாரி என கேட்கிறார். ஒவ்வொரு முறையும் உங்ககிட்ட சொல்லலாம்னு நெனச்சப காவியா வாங்கிய சத்தியம் தான் என் நினைவுக்கு வருது அதனால தான் உன்கிட்ட சொல்ல முடியல எனக் கூறுகிறார்.

காவியா காதலிச்சதை உங்ககிட்ட சொன்னா நீங்க எமோஷனலா ஏதாவது முடிவு எடுத்துருவிங்கன்னு காவியா சொல்ல வேணாம்னு சொல்லிட்டா. என்னதான் காவியா சொல்லி இருந்தாலும் நான் உன்கிட்ட மறைச்சிருக்க கூடாது தான். அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் பிரியா எனக் கூறுகிறார் ஜீவா. பேசி முடிச்சிட்டீங்களா இல்ல இன்னும் பேச ஏதாவது இருக்கா என கேட்கிறார் ப்ரியா.

உங்களை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்லை தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டு போங்க . உன் கோபம் நியாயமானது தான் பிரியா  உன் கோபம் தீர வரைக்கும் என்னை திட்டுங்க அடிங்க என்னால உன்னை விட்டுட்டு போக முடியாது பிரியா தயவு செஞ்சு என் கூட வீட்டுக்கு வாங்க எனக்கு கெஞ்சுகிறார். எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு என்ன உன் கூட கூப்பிடுற கல்யாணம் ஆனதிலிருந்து எப்பவாவது என்கிட்ட உண்மையா இருந்துருக்கியா. நீ பேசுனது பழகினது எல்லாமே பொய் என கூறுகிறார்.

பொய்யோடா முழு உருவண்டா நீ. இனிமே உன்ன மாதிரி ஒருத்தன என் வாழ்க்கையில சந்திக்க கூடாது என்று நான் கடவுல்  கிட்ட வேண்டிக்கிறேன் என கூறிவிட்டு பிரியாவும் சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment