விவாகரத்து பேப்பருடன் மாமனாரை பார்க்க வந்த பிரியா.. நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அருணாச்சலம் – ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு

Eeramana rojave
Eeramana rojave

Eeramana Rojave :  இன்றைய எபிசோடில் பிரியாவும், ஜீவாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாதி வழியில் பிரியா காரை நிறுத்த சொல்லி இறங்கி டிவோர்ஸ் பேப்பரை காண்பித்து  இதற்கு என்ன அர்த்தம் என ஜீவாவிடம் கேட்கிறார்.

இதற்கு ஜீவா தனி கொடுத்தனம் வா இல்லனா டிவோர்ஸ் பேப்பரில்  கையெழுத்து போடுறியா என நீ கேட்ட பொழுது விரத்தில் கையெழுத்து போட்டேன் ஆனா இப்ப அதை உன்கிட்ட கொடுக்க எனக்கு மனசு வரல என்று சொல்கிறார் இருந்தாலும் இதை புரிஞ்சிக்காமல் பிரியா நான் இந்த கார்லயே போய் வீட்ல இறங்குகிறேன்.

நீங்க என் கூட வராதீங்க என ஜீவாவை பாதி வழியில் விட்டுவிட்டு பிரியா காரில் ஏறி செல்கிறார். ஜீவா பின்னாடியே ஒரு ஆட்டோவில் அந்த காரை ஃபாலோ பண்ணி வருகிறார். வீட்டில் இறங்கிய பிரியா வேகமாக ரூமிற்கு சென்று கதவை முடிக்கொண்டார் பின்னாடியே ஜீவாவும் வந்து ரூம் கதவை தட்டுகிறார்.

ப்ரியா கதவை திறக்கவில்லை. அடுத்து சுவேதா வீட்டில் கவின் மற்றும் அவரது அப்பா அம்மா வருகின்றனர். அவங்க சக்திய வர சொல்லுங்க பாக்கணும் என்று சொன்ன உடன் சக்தியின் அம்மா போய் சக்தியை வர சொல்லுகிறார். பின்பு சக்தி கீழே வந்ததும் கவினின் அம்மா சக்திக்கு புடவை நகை போன்றவை கொடுத்து எப்படி இருக்குன்னு பாருமா என்று சொல்கின்றனர்.

அடுத்து கவினும் நான் கொஞ்சம் சக்தி கிட்ட பேசிட்டு வரலாமா என்று கேட்கின்றனர் அதற்கு சம்மதம் சொன்னதும் கவின் சக்தி ரூமுக்கு போய் புடவை நகையெல்லாம் எப்படி இருக்கு பாத்தியா என கேட்கிறார் மேலும் நீ சிரிச்சா அழகா இருப்ப என்றும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து அருணாச்சலம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என தன் மச்சான் இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது பிரியா டிவோர்ஸ் பேப்பரை கையில் வைத்துக் கொண்டு மாமா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் என சொல்கிறார். என்ன பிரியா என கேட்கும் போது அருணாச்சலத்திற்கு நெஞ்சுவலி வருகிறது பிறகு பார்த்தியும் ஜீவாவும் சேர்ந்து அப்பாவை ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கின்றனர். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.