அன்னைக்கு அப்படி பேசுனீங்களே பார்த்தி… இன்னைக்கு விஷத்தை கக்குறீங்க.! பிரியாவை தொடர்ந்து காவியாவின் வாழ்க்கையும் அவ்ளோதானா.!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பார்த்தி நீ காதலிச்சத சொல்லவே இல்லை என காவ்யாவை பார்த்து கேட்கிறார். அதற்கு காவியா நான் காதலிச்ச தான் சொல்லிட்டேனே நீங்க அத தெரிஞ்சு தானே ஏத்துக்கிட்டீங்க ஆனாலும் நான் எல்லாத்தையும் சொல்லணும்னு நினைச்சேன் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையவே இல்லை எனக் கூற அதற்கு பார்த்தி நீ ஏன் தம்பிய தான் காதலிச்சேன்னு ஏன் சொல்லல என கேட்கிறார்.

உடனே பார்த்தி என் கூட சந்தோஷமா வாழ முடியும் நினைக்கிறாயா என காவியாவை பார்த்து கேட்க உடனே காவியா உங்களால என்கூட சந்தோஷமா வாழ முடியாதுன்னு நினைகிறிங்களா எனக் கேட்க  உடனே பார்த்தி  எனக்கு டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன் என கூறிவிட்டு படுத்து கொள்கிறார் காவியா வெளியே வந்து கதறி கதறி அழுகிறார்.

அடுத்த காட்சியில் ஜீவா பிரியாவை தேடி வீட்டிற்கு வருகிறார். வீட்டின் கதவை ரொம்ப நேரம் தட்டிக் கொண்டிருக்கிறார் ஆனால் பிரியா எந்த ஒரு ரெஸ்பான்ஸ் பண்ணாமல் ஷோபாவில் உட்கார்ந்து கண் கலங்கி கொண்டிருக்கிறார். ப்ளீஸ் ப்ரியா கதவை திறங்க என தட்டிக் கொண்டே இருக்கிறார் ஜீவா. உடனே ஜீவா நான் செஞ்சது தப்பு தான் அதுக்காக அத்தை மாமா என்ன பண்ணுவாங்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா திறந்திடுவேன் என கூற உடனே ப்ரீயா திருந்த உங்களுக்கு எத்தனை வாய்ப்பு கொடுத்தாலும் திருந்த மாட்டாங்க உங்களை நம்பி நம்பி தான் இந்த நிலைமையில இருக்கேன் என கூறுகிறார்.

உடனே ஜீவா இனி உன் நம்பிக்கை உரியவனா இருப்பேன் என கூற உடனே ப்ரியா இந்த பொய்யான பார்வையில தான் நான் ஏமாந்தேன் ஒரு நாளாவது என் நம்பிக்கை உரியவனாய் நீ இருந்திருக்கியா இனிமே மட்டும் எப்படி இருப்ப உன்னால இனிமே மாறவும் முடியாது மாற்றவும் முடியாது தயவு செஞ்சு உன் குடும்பத்துக்காவது உண்மையா இரு என கூறிவிட்டு கதவை சாத்தி விடுகிறார்.

காவியாவின் அப்பா அம்மா பார்த்தியையும் காவியாவையும் கூப்பிடுவதற்காக வந்திருக்கிறார் அதனால் பார்த்தி காவியாவை தேடி செல்கிறார் அங்கு காவியாவிடம் மறு வீட்டிற்கு அழைக்க வந்திருக்கிறார்கள் என்னால இந்த மனநிலையில் வர முடியாது நீயே ஏதாவது சொல்லிடு என கூறி விடுகிறார் .

உடனே காவியா ஜீவா வா காதலிச்சது நான் அதை மறைத்தது நான் எந்த கஷ்டமா இருந்தாலும் எனக்கு மட்டும் கொடு தயவு செஞ்சு எங்க அப்பா அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என கூற அது மட்டும் இல்லாமல் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குன்னு எங்க அம்மா அப்பா உன்னுடைய அம்மா அப்பாவும் நினைச்சுட்டு இருக்காங்க அவங்க சந்தோஷத்தையும் நிம்மதியும் கெடுத்துறாதீங்க எதுவா இருந்தாலும் என்னை மட்டும் தண்டிங்க இதுக்கு அப்புறம் நீங்க மறு வீட்டுக்கு வர போறீங்களா இல்ல நானே போய் சொல்லிடவா என கேட்க உடனே பார்த்தி நான் மறு வீட்டுக்கு வரேன் என கூறி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment