ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகும் ஜேகே.? காவியாவை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாத பார்த்தி…! ஈரமான ரோஜாவே 2 இன்றைய முழு எபிசோட்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடில் குளத்தில் உட்கார்ந்து கொண்டு ரம்யா ஜேகே எழுதிய கடிதத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிறு வயதில் இருந்து காதலிக்கும் ஜேகே தனக்காக வாங்கி வைத்திருக்கும்  பரிசு பொருள்கள் அனைத்தையும் நினைத்து உருகி கொண்டிருக்கிறார் ரம்யா.

அடுத்த காட்சியில் பார்த்தியின் அப்பா அத்தை எங்க  பசிக்குது ஏதாவது சமைச்சு வச்சாலா இல்லையான்னு தெரியல என காவ்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்க எல்லாம் ரெடி மாமா சாப்பிடலாம் உக்காருங்க என பரிமாறிக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் பார்த்து எங்க அவனும் வந்தான்னா சாப்பிடலாமில்ல என கேட்டுக் கொண்டிருக்க பார்த்தி அந்த சமயத்தில் வருகிறார் உடனே பார்த்தியையும் உட்கார்ந்து சாப்பிட சொல்லுகிறார்.

ஆனால் பார்த்தியின் அப்பா இருவருக்கும் சண்டை என்பதை நாசுக்காக தெரிந்து கொண்டு கேட்க அதற்கு காவியா சண்டையெல்லாம் எதுவும் கிடையாது மாமா நாங்க நல்லா தான் இருக்கும் என மழுப்புகிறார். பார்த்தி அப்பா கை கழுவு போனவுடன் பார்த்தியிடம் காவியா உங்களுக்கு என் மேலதான கோபம் என் மேல மட்டும் காட்டுங்க சாப்பாட்டு மேலையோ வீட்டில் இருக்கிறவர்கள் மேலேயே காட்டாதீங்க எனக் கூற உடனே பார்த்தி  சாப்பாட்டுடன் கையை கழுவி விட்டு உன் சாப்பாட சாப்பிடவே கூடாதுன்னு நினைச்சேன் சாப்பிட வேண்டிய நிலைமை வந்துடுச்சு என கூறிவிட்டு செல்கிறார்.

கோயில் குளத்தில் ரம்யா உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஜேகே வந்து நான் மறுபடியும் யுகே செல்கிறேன் இனி உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன் என கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய காதலையும் வெளிப்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் நீ பார்த்திய காதலிச்சது எனக்கு தெரியும் பார்த்தி வேணாம்னு சொல்லியும் நீ பார்த்திய இன்னும் மறக்காம காதலிச்சுட்டு இருக்க அதோட வலி எனக்கும் தெரியும் என அந்த வலியை நானும் அனுபவசிருகன்.

எனக் கூறிவிட்டு எதெதுக்கோ ரோஸ் கொடுப்பாங்க நான் உன்னை மிஸ் பண்றேன் அதனால ரோஸ் கொடுக்கிறேன் என ஜே கே கூறிவிட்டு கிளம்பும் நேரத்தில் ஜேகேவை கூப்பிடுகிறார் ரம்யா நீ இன்னும் என்னை லவ் பண்றியா ஜேகே, பார்த்திய லவ் பண்ணது தெரிஞ்சு என்னை லவ் பண்றியா என கேட்க ஆமா என்னோட காதல் ரொம்ப பெருசு வானம் மாதிரி எல்லை கடந்தது என கூறிக் கொண்டிருக்கிறார். எங்க அம்மாவை எதிர்த்து என்னோட உன்னால சந்தோஷமா வாழ முடியுமா  எனக் கேட்க நீ ம் சொல்லு அத்தை இல்ல யார் எதித்தாலும் உன்னோட சந்தோஷமா வாழ்வேன் எனக் கூறுகிறார் ஜேகே.

இந்த சாமி மேல சத்தியமா சொல்றேன் எனக் கூற ரம்யா உடனே அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கோ என ரம்யா கேட்கிறார். இப்பவே இந்த கோவிலில் வச்சி கல்யாணம் பண்ணிக்கோ எனக் கேட்கிறார் ரம்யா விளையாடாத ரம்யா என ஜே கே கூற இப்பவே சாமி முன்னாடி வச்சு என் கழுத்துல தாலி கட்டு என ரம்யா கேட்கிறார். நான் எமோஷனலா இந்த முடிவு எடுக்கல நல்லா யோசிச்சு நிதானமா தான் எடுத்து இருக்கேன்.

நான் வேற ஒருத்தர காதலிச்சேன்னு தெரிஞ்சும் நீ எனக்காக கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன இல்ல   அந்த ஒரு வார்த்தை தான் ஜேகே இன்னையிலிருந்து இந்த ரம்யா உன்னோட ரம்யா எனக் கூறுகிறார். உடனே ஜேகே ரம்யாவிடம் ப்ரொபோஸ் செய்கிறார் அதை அக்சப்ட் பண்ணுகிறார் ரம்யா. உடனே ஜேகே ரம்யாவை தூக்கிக் கொண்டு சுத்துகிறார்.

உடனே ஜே கே காயை பிடித்து இழுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார் ரம்யா கல்யாணத்துக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு வருகிறேன் என கூற உடனே ஜேகே நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் என செல்கிறார் பிறகு ஐயிரிடம் எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் எங்க வீட்டில் இருந்து யாரும் வரவில்லை எனக் கூற உடனே ஐயர் நான் திருமணம் செய்து வைக்கிறேன் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் என திருமணம் செய்து வைக்க தாலியை எடுத்து கொடுக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment