என்னை ஏத்துக்கோ என பிரியா காலில் விழுந்து கதறிய ஜீவா.! போடா என உதறி தள்ளிய ப்ரியா.! ஈரமான ரோஜாவே இன்றைய எபிசொட்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே 2 வில் இன்றைய எபிசோடில் ஜீவா பிரியாவிடம் என்னோடு வா நீ இல்லாம நான் போக மாட்டேன் என பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன் என கூற அதற்கு ப்ரியா அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத அன்பு நா என்னன்னு உனக்கு தெரியுமா என ஜீவாவை கேவலப்படுத்துகிறார்.

காதல்னா என்னனு தெரியுமா நீ பொனம் டா  உனக்கு முன்னாடி நடந்தது ஞாபகம் இருக்கா என்ன நீ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்ன உங்களுக்கு முழுசா புடிச்சிருந்தா மட்டும் கல்யாணம் பண்ணிக்கிங்க உங்க மனசுல யாராவது இருக்காங்களா இருந்தா சொல்லிடுங்க தயவுசெய்து பெத்தவங்க சொல்றாங்கன்னு கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்க என நான் கேட்டது ஞாபகம் இருக்கா என கேட்கிறார்.

அப்பல்லாம் எதுவுமே நீ சொல்லாம அன்னைக்கு நீ ஆரம்பிச்ச போய் இப்ப வரைக்கும் பொய்தான் சொல்லிட்டு இருக்க. இப்படி ஒரு மனுஷனை நான் எப்படி நம்புறது என ஜீவாவை பார்த்து பிரியா கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் பெரியவங்க சொன்னாங்க என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுக்கு நீ கொடுத்த ஒரே பரிசு ஏமாற்றம் தானா, டெய்லியும் குடிச்சிட்டு வந்து என்னை அவ்வளவு டார்ச்சர் பண்ணின.

ஏன் இப்படி குடிச்சேன்னு கேட்டதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சதா சொன்னீங்க கொஞ்சம் கொஞ்சமா அவல மறந்துட்டு என் கூட சேர்ந்து வாழலாம்னு வாக்கு கொடுத்த. அந்த வாக்கா நீ காப்பாத்துனியா இல்லல்ல. நீ கொடுத்த வாக்க  காப்பாத்த துப்பில்ல இதுல மறுபடியும் உன்னை நம்ப சொல்றியா உனக்கே உன் மேல நம்பிக்கை இல்லாத போ என்னை மறுபடியும் நம்ப சொல்றியா நீ இன்னைக்கு மாறிடுவ நாளைக்கு மாறிடுவேன் என்று நாள் கணக்கா மாச கணக்கா நான் காத்து கிட்ட இருந்தேன்.

நீ ஒரு நாள் சொன்ன உன் கூட வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையா இருக்கு என சொன்ன இப்ப எப்படி கூப்பிடுற என்னை பார்த்தா உனக்கு ஜடம் மாதிரி தெரியுதா. உடனே ஜீவா நான் பேசுனது எல்லாமே தப்பு தான் அதுக்காக உங்களிடம் நான் எத்தனை டைம் வேணாலும் மன்னிப்பு கேட்டுக்குறேன். இதுவரைக்கும் நீங்க பார்த்த ஜீவா செத்துட்டான் இனிமே இருக்கிற ஜீவா உங்களுக்கு நம்பிக்கை உரியவனாய் இருப்பான் எனக் கூற உடனே பிரியா நிறுத்துடா ஒவ்வொரு டைமும் இந்த மாதிரி தான் பேசி என்னை நம்ப வச்ச.

அது மாதிரி நீ நடந்துக்கிட்டயா இப்ப என்னமோ நல்லவன் மாதிரி அந்த ஜீவா செத்துட்டான் என்னமோ டயலாக் எல்லாம் விட்டுட்டு இருக்க என பிரியா கேட்கிறார். உடனே ஜீவா நான் காவியாவை காதலிச்சது தவிர வேறு எதுவும் பண்ணல எனக் கூற பிரியா நான் சொல்லட்டா காவியா கண்ணீர் வடிச்சா நீயும் கண்ணீர் வடிப்ப, அவ சந்தோஷமா இருந்தா, நீ என்கிட்ட வந்து பேசுவ,  அவ கோவமா இருந்தா என் மூஞ்சிக்கு நேரா வெறுப்பா நடந்துப்ப, காவியா பார்த்திய பிரிய போறான்னு தெரிஞ்சதும் உன் கூட வாழறது எனக்கு புடிக்கல நரக வேதனையா இருக்குன்னு சொன்னியே.

நீ காவியா ஓட பிரதீ பலிப்புடா ஆனா காவியா நினைப்போடு தான் என் கூட வாழ்ந்த. இது எல்லாமே காவியாவுக்காக தான் செஞ்சுயே தவிர எனக்காக என்ன ஒரு விஷயம் செஞ்சிருக்க. நான் சொல்வதெல்லாம் உண்மைன்னா இப்பவே இங்க இருந்து போயிடு, நான் சொன்னதெல்லாம் பொய்ன்ன இப்பவே உன் கூட வரேன் சொல்லுடா சொல்லு. தயவு செஞ்சு மறுபடியும் நான் திரிந்திட்டன்னு சொல்லி என்னை தொந்தரவு பண்ணாத என் வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போயிடு என கதருகிறார்.

உடனே நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் நான் உங்களுக்கானவனா வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கொடு என்னை பிரியா காலில் விழுந்து விடுகிறார் ஜீவா. ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் ப்ரீயா கிளம்பி விடுகிறார். ஜீவா பிரியா பிரியா என கத்தி பார்க்கிறார் அடுத்த  காட்சியில் காவியா பார்த்தியின் அத்தை கூறியதை நினைத்து பார்க்கிறார்.

அதேபோல் பார்த்தியும் அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறார் காவியா ஐ லவ் யூ சொன்னதையும் நினைத்து பார்க்கிறார். ஜீவாவின் அப்பா அம்மா ஜீவாவுக்கு கால் செய்து பார்க்கிறார்கள் ஆனால் யாரும் எடுக்காததால்  என்ன நடந்தது என்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஜீவா காரில் வரும்போது நடந்த அனைத்தையும் நினைத்துக் கொண்டு  வருகிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் ஜீவாவின் அப்பா அம்மா பிரியா எங்கடா என கேட்க நடந்த அனைத்தையும் கூறிவிட்டு அவ இனிமே வருவான்னு எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என கூறுகிறார். அப்படி எல்லாம் பேசக்கூடாது என ஜீவாவின் அப்பா ஆறுதல் கூறுகிறார் ஜீவா ரூமுக்கு சென்று அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment