ஜூஸ் கலந்த சரக்கை குடித்துவிட்டு ஜீவாவிடம் ரகளை செய்த பிரியா.! ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எத்தனையோ சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்றாலும் ஈரமான ரோஜாவே இரண்டாவது பாகத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலில் ஜீவா காவியாவை காதலித்தது தெரிய வருகிறது.

அதனால் பிரியா ஜீவா உடன் இனி வாழ மாட்டேன் என முடிவு செய்து தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுகிறார். அதேபோல்  பார்த்தி  காவியா தன்னிடமிருந்து மறைத்து விட்டார் என எண்ணி அவரை ஒதுக்கி வைக்கிறார். இப்படி பார்த்தி காவியா மீது கோபத்திலும் பிரியா ஜீவா மீது கோபத்திலும் இருந்து வருகிறார்கள். அதனால் இரண்டு ஜோடிகளும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த ஜோடிகள் எப்பொழுது இணையும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது இந்த சீரியல். ஜீவா பிரியாவை எப்படியாவது அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் அதனால் ஜீவா பிரியா இருக்கும் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு வந்து விடுகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பிரியாவின் அம்மா பெரியம்மா நம்ம எல்லாரையும் தேர் திருவிழாவிற்கு கூப்பிட்டு உள்ளார்கள் என கூற அதற்கு வேலை இருப்பதாக பிரியாவின் அப்பா கூறுகிறார் ஆனால் பிரியா நான் வருகிறேன் என கூறிவிடுகிறார்.

இரண்டு பேரும் பஸ்ஸிற்கு செல்வதற்காக வெளியே சென்று விடுகிறார்கள் அந்த நேரத்தில் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ன மாமனார் மற்றும் மருமகன் இருவரும் செம குஷியாக சரக்கு அடிக்க ரெடி பண்ணுகிறார்கள் அந்த சமயத்தில் திடீரென ஊருக்கு சென்ற இருவரும் திரும்பவும் வீட்டிற்கு வருகிறார்கள் அதனால் ஜீவா ஜூஸில் சரக்கை கலந்து பீரோவில் வைத்து விடுகிறார்.

ப்ரியா பீரோவில் இருக்கும் ஜூசை எடுத்துக் குடித்து விடுகிறார் இதனால்  பிரியாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஜீவாவை கட்டிப்பிடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னை தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வை எனவும் கூறுகிறார் இதான் சான்ஸ் என ஜீவாவும் புகுந்து விளையாடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பிரியா ஜீவாவை நீயும் என் கூடவே படத்துக்கு என கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Leave a Comment