கல்விக்கடனை செலுத்தச் சொல்லி தொந்தரவு செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!

கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி, இவர் பொறியியல் படிப்பை வங்கியில் கடன் வாங்கி உதவி பெற்று தான் படிப்பை முடித்துள்ளார், படிப்பை முடித்தாலும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை அவருக்கு ஆனால் தற்காலிக பகுதி நேர வேலையை மட்டும் பார்த்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார், வேலையை தேடுவதற்காக முயற்சி செய்தாலும் இந்த ஊரடங்கு கொரோனா கால  சூழ்நிலையால் அடுத்தகட்ட வாய்ப்பை தேடி செல்ல முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் வங்கி கல்வி கடனை திரும்ப செலுத்தும்படி அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது, இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதனால் பெங்களூருக்கு  வேலை தேடிச் சென்றுள்ளார், அங்கு அவரது அத்தை வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார் ஆனாலும் பாண்டுரங்கன் குடும்பத்தாரிடம் வங்கி தரப்பில் இருந்து வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். கொடுக்க வில்லை என்றால் போலீஸில் புகார் கொடுப்போம் என கூறியுள்ளார்கள் உடனே பாண்டுரங்கம் கல்விக் கடனை கட்ட முடியவில்லை என்றால் குடும்பத்தினர் போலீசில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார்.

வங்கி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தன்னுடைய முகநூலில் வங்கி தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என பதிவிட்டுள்ளார், பதிவிட்டவுடன் அத்தை வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பாண்டுரங்கன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை சொந்த ஊரான வெங்கலம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர் வங்கி நெருக்கடியால் தான் பாண்டுரங்கன் தற்கொலை செய்துகொண்டார் என்பதால் வங்கி மீது நடவடிக்கை எடுக்காமல் பாண்டுரங்கன் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என கிராம எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் வங்கி மீது புகார் கொடுக்கவும் போவதாக பாண்டுரங்கனின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment