பொதுவாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் சீரியல், ரியாலிட்டி ஷோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தன. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இதில் காமெடிக்கு என்று பல நிகழ்ச்சி நடத்தி மக்களின் கவலையைப் போக்கி மகிழ்வித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் காமெடிக்காக கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தி வந்தனர். ஆனால் தற்பொழுது அதில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் காமெடியை மட்டுமே மைய்யமாக கொண்டு நடத்தி வருகின்றனர். அதில் மிகவும் ஃபேமசான நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியினை பெரிதும் சிறப்பாக காமெடியாக ரக்ஷன் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் சமையல் கலையிலும் காமெடியை கொண்டு வந்து அசத்திய நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியையும் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரக்ஷன் ஆவார். இதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படதிற்கு பிறகு வேறு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. திரும்ப விஜய் டிவி தொலைக்காட்சியிலே வந்து தொகுப்பாளராக பணியாற்றினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜட்ஜாக ஐஸ்வர்யா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருந்து வருகின்றனர். இதில் போட்டியாளராக புகழ்,சாய் காயத்ரி,ரித்திகா, அர்ச்சனா, பாலா போன்ற பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் எபிசோடுக்காக போட்டியாளர்கள் பலரும் பல கெட்டப்பில் வந்துள்ளனர். அதில் ரக்ஷன் ரெமோ சிவகார்த்திகேயன் போல் வேடமிட்டு அசத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.
