தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் மணிமேகலை youtube சேனல் மூலம் மட்டும் இத்தனை லட்சம் சம்பாதித்து வருகிறார்களா.? ஷாக்கான இளசுகள்.

0

திறமை இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளித்திரையில் இருப்பவர்கள்தான் மீடியா உலகில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்தோம் ஆனால் சின்னத்திரையில் சீரியல் மற்றும் தொகுப்பாளராக இருக்கும் பிரபலங்கள் தான் எதிர்பார்க்காத அளவிற்கு சம்பாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் பலரும் லட்சக்கணக்கில் சம்பளத்தை குவித்து வருகின்றனர் இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் தொகுப்பாளர் நிகழ்ச்சியையும் தாண்டி அந்த பிரபலங்கள் எல்லோரும் யூடியூப் சேனல் மூலம் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் பட்டாளத்தை  குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதை வென்ற தொகுப்பாளர்கள் ஆன பிரியங்கா மற்றும் மணிமேகலை யூடியுப் மூலம் சம்பாதிக்கும் விவரம் பற்றி ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா மருத்துவமனையிலிருந்து ஒரு வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிறக்கம் செய்தார்.

அதனை கண்டுகளித்த மக்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் அவர் 7 லட்சம் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து மணிமேகலை ஒரு மாதத்திற்கு யூடியூப் சேனல்கள் மூலம் மட்டும் ஆறு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறு வரும் பணத்தின் மூலம் தான் தொகுப்பாளர்கள் பலரும் தற்பொழுது பிஎம்டபிள்யூ ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்குகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் ஒரு அமைச்சர் எம்எல்ஏ சம்பாதிப்பதை விட இவர்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.