ஒரே ஒரு பாடலால் லட்சக்கணக்கில் சம்பாதித்த தனுஷ்.? அதுக்கும் ஆப்பு வச்சா எப்படி.! பிரச்சனை மேல் பிரச்சனை..

சினிமா உலகில் திறமைதான் முதலில் பேசும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தொடர்ந்து நடித்து அசத்தியவர் தனுஷ். சினிமா ஆரம்பத்தில் ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்ததால் அவரை அவமானப்படுத்தி பலர் பேசியுள்ளனர் இருப்பினும் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்.

அதிலும் ஒரு சில படங்களில் தனுஷ் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது அந்த வகையில் கர்ணன், வட சென்னை, ஆடுகளம்,  ஜகமே தந்திரம், அசுரன் போன்ற படங்களில் தனுஷ் நடிப்பையும் தாண்டி வாழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளதோடு தேசிய விருதையும் பெற்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டு..

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் தமிழை தாண்டி பல்வேறு புதிய படங்களிலும் நடித்திருக்கிறார் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட் ஹாலிவுட்டிலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி ஒன்று வொன்டர்பார் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி அதில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இவர் கடைசியாக மாரி 2  என்னும் படத்தையும் தயாரித்து நடித்து இருந்தார். பாலாஜி மோகன் இந்த படத்தை இயக்கியிருந்தார் இந்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்து சாய்பல்லவி முதன்முறையாக ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை விட இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் யூடிபில் பெரிய சாதனை படைத்திருக்கிறது.

யூடியூபில் மட்டும் ரவுடி பேபி பாடல் 1.35 + பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை லிஸ்டில் இருக்கிறது ஆனால் தற்பொழுது அந்த பாடலை யூடியூபில் சிலர் டேக் செய்துவிட்டனர் அதை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த வேலையை செய்தது என கூறி வருகின்றனர்.

Leave a Comment