இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரையிலும் காமெடி காதல் கலந்த திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் போடா போடி, நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் காமெடி காதல் கலந்த திரைப்படங்களாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அதே ரூட்டை பிடித்து போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை உருவாக்கினார் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்ததால் படம் தோல்வியை தழுவியது இதை நன்கு உணர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன் நமக்கு எப்பொழுதும் காமெடி மற்றும் காதல் திரைப்படங்கள் தான் ஒர்க் அவுட் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு.
தனது காதலி நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப் படத்தை எடுத்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் காமெடி என அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருந்ததால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சொல்லப்போனால் படக்குழு எதிர்பார்க்காத அளவிற்கு இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அண்மையில் படக்குழு கூட திரையரங்கில் இந்த படத்தை பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதனால் படக்குழு உற்சாகத்தில் இருக்கின்றன. உலக அளவில் இந்த திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை ஈட்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர் பல வருடங்கள் கழித்து விஜய் சேதுபதியின் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது.