நீச்சல் குளத்தில் அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட துல்கர் சல்மான்.!வைரலாகும் வீடியோ!!

மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவரது தந்தை மலையாள சினிமா துறையில் உச்சத்தில் இருப்பவர்தான் நடிகர் மம்முட்டி. தற்போது இவர்கள் சினிமா துறையில் அப்பாவும் மகனும் காலூன்றி வருகிறார்கள். துல்கர் சல்மான் 2012ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி போன்ற படங்களாகும்.

இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடித்து வரும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இப்படத்தில் ஹீரோயினாக ரிது வர்மா நடிக்க உள்ளார் மற்றும் தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரும் நடிகரும் ஆகிய கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன், நிரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரைப் படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் காட்சிகள் மிக கலர்புல்லாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல் நீச்சல் குளத்தில் அழகிய பெண்களுடன் துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் இருவரும் கொண்டாட்டத்தில் அதுபோன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் இணையதளத்தில் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். இப்படம் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.