கேங்ஸ்டராக மிரட்டும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ டிரைலர் இதோ..

Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆஃப் கோதா படம் உருவாகி இருக்கும் நிலையில் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அபிலேஷ் ஜோஷி இயக்க துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார்.

மேலும் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடிக்க இவரை தொடர்ந்து டான்சிங் ரோஸ் ஷபீர், அனிகா சுரேந்திரன், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், வட சென்னை சரண், கோகுல் கிருஷ்ணா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளார்கள். சமீபத்தில் கிங் ஆப் கோதா படத்தில் இடம்பெற்று இருந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

அந்தப் பாடலில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் மேலும் துர்கா சல்மான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் கிங் ஆப் கோதா படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு முடிவெடுத்தது.

ஆனால் அன்று இயக்குனர் சித்திக் மரணம் அடைந்ததால் படத்தின் டிரைலரை வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் யூடியூப்பில் வைரலாகி வருகிறது. கிங் ஆப் கோதா படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment