மக்களின் திடீர் முடிவால்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகபோறது யார் தெரியுமா.? தீயாய் பரவும் தகவல்.

0
bigboss
bigboss

சின்னத்திரையில் நம்பர் 1 சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கமலஹாசன் போட்டியாளர்கள் இடம் அந்த வாரம் நடந்த பிரச்சினைகள் குறித்து உரையாடுவார். மேலும் ஞாயிறு கிழமை ஒளிபரப்பப்படும் எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.

அந்தவகையில் நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, போன்றவர்கள் இதுவரை வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக பல போட்டிகளுடன் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது இந்த வாரம் கேப்டனாக பிரியங்கா வலம் வருகிறார் மற்றும் நீர் காயினை வைத்திருக்கும் வருண் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஆளுமை செய்கிறார். மேலும் இந்த வாரம் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்ற டாஸ்கில் இரு அணிகளாகப் பிரிந்து ஒருவர் மற்றொருவரின் கண்ணாடியாக மாறி அவரைப் பற்றி உண்மைகளை கூற வேண்டும்.

அதுவும் இந்த வீட்டில் யாருக்கு யாரை பிடிக்காதோ அவர்களாக பார்த்து பிக்பாஸ் இந்த டாஸ்கில் கோர்த்து விட்டுள்ளார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் அபிநய், சிபி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, பாவணி நிருப், இசைவாணி போன்றவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தொடர்ந்து சில வாரங்களாக அபிநய் நாமினேஷனில் வந்த வண்ணம் உள்ளார். மேலும் தற்போது சில வாரங்களாக இசைவாணி மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார். இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.