துணிவு படத்தின் வெற்றியால் லியோ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.! இந்த முறை அடி மேல் அடி வாங்குவாரா, இல்லை திருப்பி அடிப்பாரா.?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி ஒரு புதிய சாதனையை படித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் வெற்றியை ருசித்த அஜித் அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று மிகத் தீவிரமாக இருந்து வருகிறாராம்.

அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை ஆனால் லியோ படுத்திருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது நடிகர் அஜித்குமார் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக காத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே அறிவித்த நிலையில் அந்த இயக்குனரை நிராகரித்து தற்போது வேறு ஒரு இயக்குனரை ஏகே62 திரைப்படத்தை இயக்க வைத்திருக்கிறார்.

அந்த வகையில் ஏகே62 திரைப்படத்தை மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகி இருக்கிறது இதனை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இதற்காக நடிகர் அஜித்குமார் அவர்கள் நிறைய கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் அவர்கள் நடித்து வரும் லியோ திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படம் அதற்கு முன்பாக வெளியாக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இதனால் தான் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அஜித் செய்த செயலால் தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினரும் மிகத் தீவிரமாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் துணிவு வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இந்த முறையும் இவர்கள் இருவரும் நேரடியாக மோத உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment