இனி கல்லூரிகளிலேயே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்.! தமிழக அரசு அதிரடி

0

தமிழ்நாட்டில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன, அதனால் ஓட்டுனர் உரிமம் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன, வாகன உரிமையை வாங்குவதற்கு சமீப காலமாக கொஞ்சம் கடினமாக இருக்கிறது ஏனென்றால் அவ்வளவு கூட்டங்கள் அதிகரித்துவிட்டன.

மேலும் சாலை விபத்து அதிகமாக ஏற்படுவதால் வாகன ஓட்டிகளிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, விபத்துக்களை குறைப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக அரசு மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வாகன உரிமங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார், கல்லூரிக்கு சென்று வாகன உரிமம் வழங்குவது மற்றும் சாலை விபத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டத்திற்காக லேப்டாப் மற்றும் பிரிண்டர் டேட்டா கார்டு உள்ளிட்டவைகளை வாங்க தமிழக அரசு 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது இந்த திட்டத்தின் மூலம் விபத்துகளை குறைக்க முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் பேருந்துகளால் ஏற்படும் மாசுகளைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அமைச்சர் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க அசோக் லைலாண்ட் இடம் ஒப்புதல் தெரிவித்துள்ளது விரைவில் 2000 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.