வீட்டுல எங்க அப்பா ரொம்ப கண்டிஷன் போடுரறாரு.. அவருக்கு எதாவது வேலை கொடுங்க.. சௌரவ் கங்குலியிடம் போனில் சொன்ன டிராவிட் மகன்.! பின் என்ன நடந்தது தெரியுமா.?

dravid
dravid

பிசிசிஐ இந்திய அணியில் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டே வருகிறது அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்த வீராட்கோலி தற்பொழுதைய கேப்டன் பதவியை துறந்து அதையடுத்து தற்போது  T20 கிரிக்கெட் போட்டியில் புதிய கேப்டன்னாக ரோகித் சர்மாவை போட்டு உள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது களமிறங்கியிருக்கிறார் இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி இருந்து வந்தார். தற்போது அவரது காலம் முடிவடைந்ததை அடுத்து ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக அவதற்கு முன்பு தேசிய அகாடமியின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் அண்டர் U19 பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக விஸ்வரூபம் எடுத்து உள்ளார்.

தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசியது ஒரு தடவை ராகுல் டிராவிட்டின் மகன் எனக்கு போன் செய்திருந்தார் நான் என்ன என்று கேட்டேன் ராகுல் டிராவிட்டின் மகன் கூறியது. எனது அப்பா வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அவருக்கு ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என BCCI தலைவர் சௌரவ் கங்குலியிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை கொடுத்து உள்ளதாக கூறி  பலரையும் சிரிக்க வைத்தார். இவ்வாறு நகைச்சுவையாக சொல்ல செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.