திரௌபதி பிரம்மாண்ட கலெக்ஷன்.! பிரமாண்ட ஏற்பாடு செய்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கிய மோகன்ஜி அவர்கள் அஜித் மைத்துனர் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட்டை வைத்து திரௌபதி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் நாடக காதல், பதிவுத் திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடி ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த திரைப்படம் ஆணவக்கொலைகளை எதிர்க்கும் விதமாக அமைந்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமில்லாமல் நல்ல விமர்சனங்களை பெற்று முதல் நாளே வசூல் அள்ளியது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 50 லட்சம் எனக் கூறினார்கள். ஆனால் இதுவரை இந்த திரைப்படம் 7.21 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பாண்டிச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி அவர்களின் இல்லத்தில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுடன் பெண்கள் தினம் கொண்டாடிய தோடு மட்டுமல்லாமல் திரௌபதி படத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் கிரண்பேடி அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

draupathi
draupathi

Leave a Comment