திரௌபதி இயக்குனரின் அடுத்த படம் பற்றி அவரே வெளியிட்ட வெறித்தனமான பதிவு.! அடுத்த முறை வேற லெவல் தான்

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி இவர் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்றுவரும் திரைப்படம்தான் திரௌபதி. இந்த திரைப்படத்தை பிரபல விகடன் பத்திரிக்கை விமர்சனம் செய்தது.

திரௌபதி திரைப்படத்திற்கு விகடன் 100க்கு 29 மார்க் மட்டுமே கொடுத்தது, அது மட்டுமில்லாமல் தன் தரப்பு நியாயத்தை சினிமா வழி பேசுவதில் தவறில்லை எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்தி சித்தரித்தது முழு எதிரொலியாக முன்னிறுத்துவது தவறு திரௌபதி அறம் பேசவில்லை என குறிப்பிட்டிருந்தார், இந்த பதிவைப் பார்த்த இயக்குனர் மோகன்ஜி தக்க பதிலடி கொடுத்தார்.

அதில் அவர் கூறியதாவது இந்த மார்க் என் படத்திற்கான மார்க் இல்லை என் சமூகத்திலிருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது வெறும் ஆரம்பம் தான் பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள், இப்படியே குப்புறப்படுத்து புலம்ப வேண்டியதுதான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கலாட்டா என்ற பிரபல இணையதள ஊடகம் இயக்குனர் மோகன் ஜி யை பேட்டி எடுத்தது ஆனால் அந்த வீடியோவில் மோகன்ஜி பதில் சொல்ல முடியாமல் எழுந்து சென்றுவிட்டார் என திரித்து வீடியோவை வெளியிட்டது, ஆனால் மோகன்ஜி அந்த பேட்டி பற்றி கூறிய பொழுது, நான் அப்படி செல்லவில்லை பேட்டியை முறையாக முடித்துவிட்டு தான் அங்கிருந்து வந்தேன், பின்பு கலாட்டா அலுவலகத்திற்கே சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வியை எழுப்பிய வீடியோவும் இணையதளத்தில் வைரல் ஆனது.

இதுகுறித்து இயக்குனர் மோகன்ஜி தனது டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் என் படத்திற்கு திரௌபதி-ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..

Leave a Comment