திரௌபதி திரைவிமர்சனம்.!

தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்கிறது அதேபோல் தமிழ் சினிமா மூலம் நல்ல விஷயங்களை மக்களிடம் பரப்புகிறார்கள், அது போல் சில தீய விஷயங்களும் மக்களிடம் பிரபலமாகிறது, மேலும் சினிமாவில் சமீபகாலமாக சாதியக் கொடுமை, பாதிக்கப்பட்டவர்களின் அவலங்கள் என அனைத்தையும் திரையில் காட்டி வருகிறார்கள்.

சமீபகாலமாக பல இடங்களில் காதல் திருமணத்திற்கு எதிராக ஆவண கொலைகள் நடைபெற்று வருகின்றன, அது போல் உள்ள பிரச்சனைகளை படமாக எடுப்பதால் சர்ச்சையை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் திரௌபதி. யார் தான் திரௌபதி.? அவர்களின் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை.

படத்தில் நாயகனாக ரிசார்ட் நடித்துள்ளார் இவர் ஒரு ஊரில் சிலம்ப கலைஞர், இவருக்கு ஒரு மாமன் மகள் இருக்கிறார் அவர்தான் திரௌபதி அவரை மணம் முடித்துக் கொள்கிறார், திரௌபதிக்கு சித்தப்பா இருக்கிறார் அவர் கிராமத்தில் மரியாதைக்குரிய பெரிய தலைவராக இருக்கிறார், இவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

அழகிய கிராமத்தில் இவர்களின் வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கிறது, திரௌபதி தனது கிராமத்திற்கு பல நலத்திட்டங்களை, மற்றும் நல்ல விஷயங்களை செய்து வருகிறார், இந்த நிலையில் ஒரு குளிர்பான கம்பெனிக்காக ஒரு கும்பல் பித்தலாட்டத்தில்  ஈடுபடுகிறது கிராமத்திலிருக்கும் நலனை பாதிக்கும் இந்த விஷயத்திற்கு ஊர் மக்கள் மற்றும் திரௌபதி எதிராக இருக்கிறார்கள்.

எனவே திடீரென கிராம தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வந்ததும் தலைவர் அவர்கள் உயிரை விடுகிறார். பின்பு ஒரு நாள் எதிர்பாராதவிதமாக திரௌபதியையும் அவளின் தங்கையையும் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்படுகிறது., சிறைக்கு சென்ற ரிசார்ட் என்ன ஆனார் திரௌபதி கொலை முயற்சியில் இருந்து தப்பித்தாரா அவரின் தங்கைக்கு என்ன நடந்தது என்பதை பேசுவது இந்த திரௌபதி.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது அஜித்தின் மைத்துனர் ஷாலினியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும், இவர் ஏற்கனவே மலையாளம் கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த நிலையில் தமிழில் இவர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரிச்சர்ட் படத்தில் மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராக தனது அற்புதமான நடிப்பை காட்டியுள்ளார், அதேபோல் நடிகை ஷீலா ராஜ் குமார்  நடித்துள்ளார் இவர் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்திருந்ததை பார்த்து இருக்கலாம் அதன் பின் டூ லேட், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். திரௌபதியாக இந்த திரைப்படத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

அவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதேபோல் கருணாஸ் பொதுநல வழக்கறிஞராக படத்தில் அவர் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுப்பதும் திரௌபதியின் நியாயத்திற்கு போராடுவதும் என விடாமல் வசனம் பேசுகிறார் இந்த கதாபாத்திரம் அவரின் அரசியலுக்கு ஏற்ற முயற்சி.

அதேபோல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கலை ஆவணக்கொலை என்ற பெயரில் நடக்கும் கொடுமையை மிகவும் தைரியமாக பேசியதற்கு இயக்குனருக்கு ஒரு கைதட்டல். அதேபோல் படத்தில் சில காட்சிகள் ஒன்றி வராமல் இருப்பது சில இடங்களில் சொதப்பலாக இருக்கிறது இன்னும் படத்தை முறைப்படுத்தி இருக்கலாம்.

போலியாகத் திருமண பதிவு செய்பவர்களுக்கு துணை போபவர்கள் மனம் மாறினால் அனைவருக்கும் நல்லது தான். திரௌபதி ஒரு சமூக விழிப்புணர்வு

திரௌபதி 2.25 / 5

Leave a Comment