வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டி போடும் திரௌபதி.! மூன்றாவது நாள் வசூல் நிலவரம் இதோ.!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியவர் மோகன் ஜி இவர் தற்பொழுது திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித்தின் மைத்துனர் ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன, கடந்த வெள்ளிக்கிழமை தான் இந்த படம் ரிலீஸ் ஆகியது, படத்தின் மொத்த பட்ஜெட் 50 லட்சம் எனவும் கூறுகிறார்கள் ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

படத்தை காண குடும்பம் குடும்பங்களுடன் கூட்டமாக செல்கிறார்கள் திரையரங்கிற்கு, இந்த திரைப்படம் முதல்நாளே 2.76 கோடி வசூல் செய்தது அதுமட்டுமில்லாமல் இரண்டாவது நாள் 1.50 கோடியும் வசூல் வேட்டை நடத்தியது, இந்த நிலையில் இரண்டே நாளில் 4.2 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்று மட்டும் 1.78 கோடி வசூல் செய்தது இந்த திரைப்படம் ஆக மொத்தத்தில் 6.04 கோடி ரூபாய் வசூலித்தது என தகவல் கிடைத்துள்ளன.

வெறும் ஐம்பது லட்சம் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மூன்றே நாளில் ஆறு கோடி ரூபாய்க்கு வசூல் செய்து ஹாலிவுட் சினிமாவையே அதிர வைத்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் வேட்டை என பலரும் கூறி வருகிறார்கள்.

draupathi
draupathi

Leave a Comment