கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.!

0

கோவையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள் இதுதொடர்பாக போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீழநத்தம் பகுதியில் கொண்ட பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு தொழிலாளர்களை வைத்து கழிவு  நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அப்போது விஷவாயு தாக்கி 3 பேர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

dead
dead

முதலில் ஒருவரை தான் விஷவாயு தாக்கியது அவரைக் காப்பாற்ற மீதி ரெண்டு பேரும் இறங்கினார்கள் அப்போது மூச்சுத்திணறி இவர்களும் இறந்து விட்டார்கள், இருந்ததும் தீயணைப்புத்துறைக்கு மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்த பின்பு இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மேலும் வழக்கு பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி  வருகிறார்கள் இப்படி தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி கழிவு நீர்  தொட்டியில் இறங்கி உயிர் இருப்பது தொடர் கதையாக இருக்கிறது, இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.