இந்த ஒரு கேள்வியை கேட்டு என் உயிரை எடுக்காதீங்க.. ரசிகர்களிடம் கோபப்பட்ட நடிகை ஓவியா.! என்னவா இருக்கும்

0
oviya
oviya

கேரள நடிகையான ஓவியா தமிழில் விமல் நடிப்பில் உருவான “களவாணி” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட்  அடித்ததால் பட வாய்ப்புகள் குதிந்தன. முத்துக்கு முத்தாக, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம், சண்டமாருதம் என ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா..

மறுபக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் கிளாமர் காட்சிகளிலும், சமூக வலைதளக பக்கங்களில் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வந்தார் இப்படி வெள்ளி திரையில் வெற்றி கண்டு வந்த இவர் திடீரென பிக்பாஸ் சீசன் ஒன் மற்றும் சீசன் 2 வில் கலந்து கொண்டு மேலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாகிக் கொண்டார்.

வெளியே வந்த அவர் நடித்த 90ml திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த படம் சர்ச்சை படமாக அமைய ஓவியாவுக்கு  அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்பொழுது தான் ஓவியா ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படங்கள் ஹிட் அடிக்கும் பச்சத்தில் தமிழில் விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஓவியா சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.  அப்படி அண்மையில் ரசிகர்களிடம் பேசி உள்ளார்.

oviya
oviya

ஒரு ரசிகர் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த ஓவியா நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும், ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிர் எடுக்குறீங்க எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில்    காட்டு தீ போல பரவி வருகிறது