தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சீரியலுக்கான பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக சன் டிவி விளங்குகிறது. மேலும் தமிழ் சின்னத்திரையில் சீரியல் என்றாலே சன் டிவி தான் வித்தியாசமான கதை அம்சத்துடன் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களின் கவனத்தை சன் டிவி ஈர்த்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிய சீரியல்களும் அறிமுகமாகி வருகிறது தற்பொழுது புதிய சீரியல் ஒன்று துவங்க உள்ள நிலையில் அந்த புத்தம் புதிய சீரியலில் நடிகர் நந்தன் லோகநாதன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்கள் மேலும் இவர்கள் நடிக்கும் இந்த சீரியலை சரிகமா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த சீரியலின் ஹீரோ நந்தன் லோகநாதன் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் மேலும் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்தாள் ஶ்ரீ தேவி, சித்திரம் பேசுதடி 2 போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் கதாநாயகியாக நடித்து வரும் ஹிமா பிந்து 1000 எபிசோடுகளை தாண்டி கலர் தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இதயத்தை திருடாதே சீரியலில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார்.
இந்த சீரியலில் ஹிமா பிந்து நடிகர் நவீன் உடன் இணைந்து நடித்திருந்தார் இவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் சீரியலில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கலர்ஸ் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தொடர்களில் இதயத்தை திருடாதே சீரியல் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்த சீரியல் முடிந்த பிறகு ஹீமா பிந்து நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு சன் டிவி நடிப்பதற்கான புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது எனவே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு கலர்ஸ் தமிழ் சேனலில் இரண்டு பிரபலங்களும் தற்பொழுது சன் டிவியின் சீரியலுக்கு அறிமுகமாக இருக்கிறார்கள்.