அந்த மாதிரியான நேரத்தில் கூட என்னை விட்டு வைக்கல.. மனம் நொந்து பேசிய நடிகை வாணி போஜன்.!

Vani bhojan
Vani bhojan

Vani bhojan : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவனுமே இருக்கிறது. அப்படி வந்தவர் நடிகை வாணி போஜன். முதலில் வாணி போஜன் கிங்பிஷர் ஏர்லைனில் மூன்று வருடம் பணி பெண்ணாக பணிபுரிந்தார். அதன் பிறகு மாடல் அழகியாக தனது கேரியரை ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் அடித்தார் இருந்தாலும் பெரிய அளவில் இவர் பேமஸ் ஆனது சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் தான்.

படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார் முதலில் ஓர் இரவு என்னும் படத்தில் நடித்த அசத்தினர் அதனை தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு “ஓ மை கடவுளே” படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் பட வாய்ப்புகளும் அதிகமாக குவிந்தது அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு, லவ், மிரள் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சுமாராக ஓடின.

இதிலிருந்து மீண்டு வர வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், casino, ஆரியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் வாணி போஜன் சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Vani bhojan
Vani bhojan

நான் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டேன் அப்பொழுது எனக்கு பீரியட்ஸ் நேரம் முந்தின நாட்களில் நான் சரியாக தூங்கவில்லை இதனால் என் உடல் நிலையும் மிகவும் சோர்வடைந்து முகம் எல்லாம் வீக்கத்துடன் இருந்தது. இதனைப் பார்த்த பலரும் வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார் திடீரென அவர்கள் முகத்திற்கு என்ன ஆயிற்று என்றெல்லாம் செய்தி எழுதி வெளியிட்டார்கள்.

அது எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் இது போன்ற பிரச்சனை இருக்கும்.. அவரவர் உடல் நிலையை பொறுத்து அந்த நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் எனக்கு அந்த சமயத்தில் முகம் எல்லாம் சற்று பூசின மாதிரி இருக்கும் அதுக்காக இப்படி எல்லாம் வதந்தி பரப்பி விட்டுட்டாங்க என ஆதங்கப்பட்டார்.