என்னை விமர்சிக்காதீர்கள்.. நான் சொல்ல வந்த விஷயமே வேறு..! வாரிசு தயாரிப்பாளர் பேட்டி.

தளபதி விஜய் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த ஒரு திரைப்படமாக உருவாகி வந்தாலும்..

இந்த படத்திலும் அதிகமான சண்டை காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகள் அதிகம் இருப்பதாக படக்குழு சைடிலிருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆகிறது அதே தேதியில் அஜித்தின் துணிவு திரைப்படம் 100% எதிர்த்து மோதுகிறது.

படம் வெளிவந்த பிறகு தான் இரண்டு படங்களும் சண்டை போட்டுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் சண்டை போட்டுக் கொள்கின்றனர் இந்த நிலையில் அந்த சண்டையை பெரிசாகும் வகையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தை பேட்டி ஒன்றில் அஜித் – விஜய் குறித்து பேசியது இன்னும் பரபரப்பை கிளப்பி உள்ளது அதில் அவர் சொன்னது என்னவென்றால்..

தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ.. அஜித்தை விட விஜய்க்கு மார்க்கெட் அதிகம் அதனால் சரிசமமான தியேட்டர்கள் வழங்கக்கூடாது. வாரிசு படத்திற்கு இன்னும் 50 தியேட்டர்கள் சேர்த்து தர உதயநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த செய்தி பெரிய அளவில் வைரலானது அதன் காரணமாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவை..

தல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் தற்போது இதற்கு அவர் பதில்  கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் 45 நிமிடம் பேட்டி கொடுத்தேன். இதில் 30 செகண்ட் வீடியோ வெளியாகி தற்பொழுது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நான் கூறியது வேறு என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Comment