வதந்திகளை நம்பாதீங்க.. “லியோ” திரைப்படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த பிரபல பத்திரிகையாளர்..!

vijay
vijay

தளபதி விஜய் அண்மை காலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறார் அந்த வகையில் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

விஜயுடன் இணைந்து  அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் மேலும் இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா போன்றவர்கள் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவ்வபோது கிசுகிசுக்கப்படுகிறது.

லியோ படமும் வழக்கம் போல லோகேஷின் யூனிவர்சலில் இடம்பெறும் என பலரும் கூறுகின்றனர் ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..  படம் வந்தால் எல்லாம் தெரிந்து விடும் என கூறுகின்றனர் இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து ஒரு சில தகவல்களும் வெளியாகி உள்ளது.

அதாவது லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்பாக விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு  படத்தின் டீசர் வெளிவர உள்ளது எனவும் அந்த டீசருக்கு கமலஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் எனவும் ஒரு தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவியதை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி இது குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. லியோ டீசர் விஜயின் பிறந்தநாளுக்கு வெளிவர உள்ளதாக வெளிவந்த தகவலும் கமலஹாசன் அந்த டீசருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்ற தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .