நீ நடிச்ச வரைக்கும் போதும் என் படத்துல இனி நடிக்க வேண்டாம்..! பிரபல ஹீரோவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேத்து முன்தினம் வெளியான படங்களில் ஒன்று சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல். இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெய், இவர் காபி வித் காதல் திரைப்படத்திற்காக ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார் அதிலும் குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தில் நடிகர் ஜெய் அவருக்கு தம்பியாக நடித்திருப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனைத் தொடர்ந்து பகவதி படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதில் உள்ள மறக்க முடியாத சில நிகழ்வுகளை ஜெய் அவர்கள் கூறியிருந்தார். அப்போது பகவதி படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது அப்போது விஜய் அண்ணன் தன்னிடம் வந்து பலமுறை ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

பகவதி படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து விஜய் அண்ணனிடம் மறுபடியும் உங்களுடைய படத்தில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என்று கேட்டேன் அதற்கு விஜய் அவர்கள் இனிமேல் நீ ஹீரோவா தான் நடிக்க வேண்டும் என்னுடைய படத்தில் நீ நடிக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.

இதை அந்த பேட்டியில் கூறிய ஜெய் எப்படியாவது விஜய் உடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள நடிகர்கள் விஜயுடன் இணைந்து நடிக்கும் போது ஜெயிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment