இரண்டாவது நாளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் “டான்” திரைப்படம்.! தமிழகத்தில் மொத்தமாக அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் எப்போதும் காமெடி கலந்த படங்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் டான்.

இளம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி மற்றும் பலர் டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க காலேஜில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் என இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பார்த்து கண்டு களிக்கின்றனர் இதனால் இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை அல்ல தொடங்கியுள்ளது முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 15 கோடி வசூல் செய்த டான் திரைப்படம்.

இரண்டாவது நாளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இரண்டு நாட்களில் சுமார் 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் திரைப்படமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் படம் போல டான் திரைப்படமும் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்த ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சரி மிக முக்கியமான படமாக அமைய இருக்கிறது என சினிமா பிரபலங்கள் பலரும் சொல்லி வருகின்றனர்.

Leave a Comment