போட்ட பணத்தை 3 நாளில் அள்ளிய சிவகார்த்திகேயன்.! டான் வசூல் எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் முன்னணி  தொகுப்பாளராக பணியாற்றியவர் தான்  சிவகார்த்திகேயன். மேலும் இவர் தமிழ் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினி முருகன்,வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல்,நம்ம வீட்டுப்பிள்ளை, டாக்டர் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். மேலும் இவர் நடித்த  காக்கி சட்டை, ரஜினிமுருகன் என ஒரு சில திரைப்படங்களில் கூட பாடலை பாடி இருப்பார்.

இவர் நடிப்பில் தற்சமயத்தில் வெளியான ‘டான்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்தத் திரைப்படம் மூன்று நாட்களில் 30 கோடி வசூலை தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மூன்று நாளிலும் டிக்கெட் ஹவுஸ்புல் ஆகவே இருந்து வருகின்ற நிலையில் முதல் நாளில் 13 கோடியும், இரண்டாவது நாளில் 11 கோடியும், மூன்றாவது நாளில் 9 கோடியும் வசூலித்து கொடுத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைபடமாகும்.

don
don

மேலும் ‘டான்’ திரைப்படம் 40 கோடியை மூன்றே நாளில் 33 கோடி வரை பெற்று கொடுத்தது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே நடிகர் சிவகார்த்திகேயன் வசூலில் அடுத்த டான் ஆகிவிட்டார் என்று சமூகவலைத்தளத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment