டான் படத்தை சொதப்போ சொதப்புனு சொதப்பிய இரண்டு கதாபாத்திரங்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டான் திரைப்படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா வின் வில்லத்தனமான கதாபாத்திரம் மற்றும் சமுத்திரக்கனியின் எதார்த்தமான நடிப்பும் இந்த படத்தை மிகவும் விறு விறுப்பாக கொண்டு சேர்த்தது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்த விஜே விஜய் நடிப்பு இந்த படத்தில் ஒட்டாதது போல் தெரிகிறது.ஆனால் சிவகார்த்திகேயனின் மற்றொரு நண்பராக நடித்த பாலா சரவணன் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது.

don
don

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய ஷிவாங்கி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும்  ஃபேமஸ் ஆனார்.

டான் படத்தில் சிவாங்கி நடிக்கிறார் என்று தெரிந்த உடனே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைஏற்ப்படுத்தியது ஆனால் டான் திரைப்படம் வெளியாகும்போது ஏமாற்றத்துடன் வெளியேறினார் அவர்கள் என்றுதான் கூறவேண்டும். அதுமட்டுமல்லாமல்  ஷிவாங்கியவர்கள் இந்தப் படம் குறித்து ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வந்தார். அவையெல்லாம்  ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்து தள்ளும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment