உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதுவரை சுமார் முன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் இதற்கான எதிர்வினையாற்றும் மருந்தை உலக சுகாதார அமைப்பு மற்றும் சீன மருத்துவமும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல நாடுகளுக்கு பரவி உள்ளது கொரோனா வைரஸ் அதுபோல தற்போது இந்தியாவிலும் பரவிவருகிறது என தகவல் தெரிவிகின்றன இந்த நிலையில் விவேக் அவர்கள் கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டுமென கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பை பரப்பும் விதமாக கைபேசியை, வானொலி, தொலைக்காட்சி என பல ஊடகங்கள் வழியாக அறிவுறுத்தி வருகின்றனர்.
எப்படிப் பாதுகாத்துக் கொள்வது அடிக்கடி கை கழுவும் வேண்டும் சாதாரண தும்மல், சளி போன்ற பாதிப்பு இருந்தால் மருத்துவரை செல்லும்படி அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிலையில் விவேக் மேலும் கூறியது கொரோனா வைரஸ் தற்போது இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் பரவிவருகிறது அதுவும் தமிழகத்தில் அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் தாமாகவே அழிந்து விடும் எனவே இது குறித்து யாரும் பயப்படவேண்டாம்.
இருப்பினும் பாதுகாத்து கொள்ளும் முறையை உங்களுக்கு விவரித்து உள்ளார் அனைவரும் அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவவும், கையை நன்றாக சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் எனவும் சளி இருமல் தும்மல் வந்தால் கைகளின் மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்வது நல்லது. அடிக்கடி தும்மல் வரும் நபர்களிடமிருந்து நெருங்கி பழகுவதை தவிர்த்து கொள்ளுங்கள் மேலும் அவரை மாஸ்க் போடும்படி அறிவுறுத்துங்கள் என கேட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியது முக்கியமாக தமிழர்களுக்கு உண்டான கலாச்சாரம் யாருக்கும் கைகொடுக்காமல் கை எடுத்து கும்பிடுங்கள் என தெரிவித்தார் இதை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் இருந்து தப்பிக்கலாம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்