அஜித்துக்கே டஃப் கொடுக்கும் விஜய்.. இத்தனை சொகுசு கார்களா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Vijay Car Collection : தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த ட்ரைலர், இசை வெளியீட்டு விழா போன்றவற்றை வெளியிட இருக்கிறது. லியோ படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க ரெடியாக உள்ளார்.   இந்த படம் முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் திரைப்படம் உருவாக இருக்கிறது.

மேலும் சினேகா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் வெற்றி நடிகராக ஓடும் விஜய் ஒரு படத்திற்கு குறைந்தது 80 கோடியில் இருந்து 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தையே இடம், வீடு  பல வழிகளில் வாங்கி வைத்திருக்கிறார்.

அதுபோல கார்களையும் குவித்து வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயின் நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது விஜய் இடம் இருக்கும் கார்கள் பற்றிய அவர் சொல்லி உள்ளார். டாட்டா எஸ்டேட் 1992 – 2000 மாடல், டொயோட்டோ சேரா 1990 – 1996 மாடல், டொயோட்டா இனோவா  கிறிஸ்டா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம், பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 2008 தொடங்கி தற்போதைய மாடல்.

நிசான் எக்ஸ்  டிரெயில் 2000, ஆடி ஏ8, பிரீமியர் 118NE, மினி கூப்பர் எஸ்  போன்ற கார்களை வைத்துள்ளாராம். ஏதாவது அவசரம் என்றால் காரை எடுத்துக் கொண்டு சீறி பாய்வாராம் எல்லாத்தையும் தன் கண்ட்ரோலில் தான் விஜய் வைத்திருப்பார் எனவும் விஜயின் நெருங்கிய நண்பர் சிரஞ்சீவி அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.