இன்னும் 40 கோடி தான்.. கோட்டையில் எங்க கொடிதான் பறக்கும்.. மார்தட்டிக் கொள்ளும் அஜித் ரசிகர்கள்.

0
ajith-
ajith-

விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் இறங்குவது வழக்கம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. இதில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மோகன சுந்தரம், ஜான் கொக்கன்..

மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி போன்ற பலரும் நடித்துள்ளனர். துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படமாக இருந்தாலும் சில சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் இந்த படத்தில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு அனைவரையும்..

வெகுவாக கவர்ந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று  வசூல் ரீதியாக பட்டையை கிளப்புகிறது நிச்சயம்  இந்த படம் பிளாக்பஸ்டர்.. லிஸ்ட்டில் இணைவதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என படத்தை பார்த்த அனைவரும் சொல்லி வருகின்றனர் இதனால் அஜித்தும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

மேலும் படக்குழு வெகு விரைவில் ஒரு சின்ன பார்ட்டி வைக்க  இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் 5  நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 65 கோடி வசூலித்து இருக்கிறது. உலகம் முழுவதும் 125 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது.

இந்த நிலையில் துணிவு படம் இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்தால் ஹிட் வரிசையில் இணையும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படம் இன்னும் 40 கோடி வசூல் செய்தாலே போதும்  படம் ஹிட் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது அதனால் அஜித் ரசிகர்கள் 2 நாள் போதும் அத தட்டி தூக்கிடுவோம் என சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.