இந்த பூனையும் பால் குடிக்குமா? என நினைத்தவர்களுக்கு பீரையே குடித்து காட்டிய அனிகா சுரேந்திரன்.! லிப் லாக் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த அஜித்தின் ரீல் மகள்…

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பிரபலமான நடிகை அனிகா சுரேந்திரன் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவர்களுடைய அப்பா மகள் கதாபாத்திரம் ஒத்துபாகவே அதனை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருப்பார் அனிகா சுரேந்திரன்.

இதனை தொடர்ந்து நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமாகியிருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் நடிகை அணிகா லிப் லாக் சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது 18 வயதாகும் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கும் ஓ மை டார்லிங் திரைப்படத்தின் டிரைலரில் பல இடங்களில் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைத்தவர்கள் மத்தியில் பீரையே குடிக்கும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை அனிகா தற்போது இந்த லிப் லாக் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் திரைப்படம் ஒரு முழு நீள காதல் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

அப்படியாப்பட்ட ஒரு கதையில் முத்த காட்சிகள் இடம் பெற்று இருப்பதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போது லிப் லாக் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் சொல்லியிருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் கதைக்கு தேவைப்பட்டதால் தான் நான் லிப் லாக் காட்சியில் நடித்தேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகை அணிகா சுரேந்திரன். அது மட்டுமல்லாமல் அந்த காட்சியில் ஆபாசம் எதுவும் இல்லை என்றும் கூறி அந்த லிப் லாக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment