ஏப்ரல் மாதத்தில் நடித்த ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் இருக்கிறார்களா.! வைரலாகும் புகைப்படம்..

sri kanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் கலக்கி வந்தார்.

இவர் முதல் படமான ரோஜா கூட்டம் படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதுவும் முக்கியமாக பெண் ரசிகர்கள் இவருக்கென்று இன்று வரையிலும் இருந்து தான் வருகிறார்கள். சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த்தும் திகழ்கிறார்.

இவ்வாறு திரையுலகில் கொடி கட்டிப்  பறந்து வந்த இவரின் மீது பல காதல் சர்ச்சைகள் ஏற்பட்டதால் இவரின் மார்க்கெட் குறைந்தது.பிறகு 2007ஆம் ஆண்டு தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்த ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகன்,மகள் என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

sri naath 1
srikanth 1
sri naath
srikanth