தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் நகுலின் மனைவி சுருதி பாஸ்கர் மிகவும் அழகாக பாடிய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நகுலின் மனைவியா இவ்வளவு அழகாக பாடுறது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நகுல் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் எரியும் கண்ணாடி உள்ளிட்ட சில சில திரைப்படங்கள் மட்டுமே இவருடைய நடிப்பில் வெளியானது.
பிறகு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் மேலும் அதில் இருந்தும் இவர் சமீபத்தில் விலகிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் நகுல் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய மகள் மற்றும் மனைவியை ஆகியோர்களுடன் இருக்கும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது தனது மனைவி பாடும் பாடல்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலை சுருதி பாஸ்கர் மற்றும் நகுல் பாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட அது தற்பொழுது லைக்குகளை குவிந்து வருகிறது.
அதில் இறுதியாக தூக்கம் இல்லாத இரவுகள் மற்றும் சோர்வுற்ற பகல்களுக்கு மத்தியில் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பதிவு செய்தோம் அகிரா வீடியோவில் உட்கார வர மறுத்து நாங்கள் பதிவு செய்யும் பொழுது எங்கள் தொலைபேசியை கூட தள்ளினார் நாங்கள் பாடும் பொழுது அமோர் பேசுவதை பின்னணியில் நீங்கள் கேட்கலாம் என்று பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.